இந்தியாவின் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜானுதினபூர் பகுதியை சேர்ந்தவர் சல்மான். இவர் அப்பகுதியை சேர்ந்த 10 வயது சிறுவனை ஓரினசேர்கைக்கு அழைத்து துன்புறுத்தியுள்ளான்.
அதற்கு சிறுவன் மறுப்பு தெரிவிக்க, சிறுவனை இளைஞன் தாக்கியுள்ளான். மேலும், சிறுவன் தன்னை காப்பாற்றக்கூறி கத்தவே, அக்கம் பக்கத்தினர் சுதாரித்துக்கொள்வார்கள் என்று கூறி கழுத்தை நெரித்துள்ளான்.
பின்னர் சிறுவனின் உடலை புதரில் போட்டு எரிக்கவே, சிறுவன் உடலின் சூடு தாங்க இயலாமல் அலறியுள்ளான். பின்னர் அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமத்துள்ளனர். இதையடுத்து, சிறுவனிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சல்மானை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.