லண்டனில் பல பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து பண மோசடி செய்த இரண்டு சகோதரர்கள் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Nazmul Ahmed (26) மற்றும் அவர் சகோதரர் Selim Ahmed (32) ஆகிய இருவரும் குற்றாவாளிகள் என லண்டன் நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில் Nazmul Ahmedக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
மேலும் அவர் சகோதரர் Selim Ahmedக்கான தண்டனை விபரம் வரும் 22ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.
இந்த தீர்ப்பின் போது நீதிபதி, Nazmul ஒரு சூரையாடும் இரக்கமற்ற பாலியல் குற்றவாளி என காட்டமாக தெரிவித்தார்.
இந்த வழக்கு குறித்து டிடக்டிவ் அதிகாரி லூயிஸ் கவின் கூறுகையில், Nazmul மாறும் Selim இருவரும் எளிதில் இலக்காகும் பெண்களையே குறிவைத்து பாலியல் வன்கொடுமை மற்றும் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி கடந்த 2018 செப்டம்பர் 15ஆம் திகதி இளம்பெண் தனது தோழிகளுடன் வந்த போது காரில் வந்த Nazmul அவரிடம் பேச்சு கொடுத்து காரில் ஏற்றியுள்ளான்.
பின்னர் அவர் தூக்கத்தில் இருந்து எழுந்த போது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதை உணர்ந்துள்ளார்.
அதே போல கடந்தாண்டு மார்ச் 2ஆம் திகதி 20 வயது பெண் ஹொட்டலுக்கு வந்த போது அங்கு சுயநினைவின்றி கிடந்துள்ளார்.
எழுந்து பார்த்த போது அவரின் செல்போன், வங்கி கார்டு காணாமல் போயிருந்தது, மேலும் அவர் வங்கிக்கணக்கில் இருந்து பணமும் எடுக்கபட்டிருந்தது.
விசாரணையில் Nazmul தான் அவரை ஏமாற்றியது தெரியவந்தது, இதற்கு Nazmul-ன் காதலியும் உதவியுள்ளார்.
இதே போல பல பெண்களை Nazmul மாறும் Selim இருவரும் ஏமாற்றி வன்கொடுமை செய்து பணத்தை திருடியுள்ளனர்.
இந்த சூழலில் கடந்த மாதம் ஜூன் மாதம் அவர்களை கைது செய்தோம். இருவரும் கார் ஓட்டுனர் போலவே பெண்களிடம் சென்று தங்கள் காரில் ஏறி கொள்ளுமாறு கூறி ஏமாற்றியுள்ளனர்.
இந்த வழக்கில் Nazmul காதலிக்கு 140 மணி நேரம் சம்பளம் பெறாமல் சமுதாய பணி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.