ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியாவை சேர்ந்த நபருக்கு 10 மில்லியன் திர்ஹாம் லொட்டரியில் பரிசாக விழுந்துள்ளதால், அவர் இன்ப அதிர்ச்சியில் உள்ளார்.
அபுதாபியில் நடந்த Big Ticket draw-விலே அவர் இந்த பரிசை வென்றுள்ளார்.
கேரளாவின் Thrissur மாவட்டத்தை சேர்ந்த Dileepkumar Ellikkottil Parameswaran, ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏழு ஆண்டுகளாக வசித்து வருகிறார்.
இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அங்கிருக்கும் ஆட்டோ உதிரி பாகங்கள் நிறுவனத்தில் மாதம் 5,000 திர்ஹாமிற்கு வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் இது குறித்து அவர் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்.
எனக்கு 700,000 திர்ஹாம் கடன் உள்ளது. தற்போது இந்த அதிர்ஷ்டத்தின் மூலம், அது சரி செய்யும் என்று நம்புகிறேன்.
தனக்கு 16 மற்றும் 9 வயதுடைய இரண்டு குழந்தைகள் உள்ளனர். பணத்தின் ஒரு பகுதியை அவர்களின் எதிர்கால கல்விக்கு வைக்கவுள்ளேன்.
என்னுடைய மனைவி குடும்பத்தை கவனித்து வருவதாக கூறியுள்ளார். இந்த Big Ticket draw என்பது, அபுதாபியில் ரொக்கப் பரிசுகள் மற்றும் கனவு சொகுசு கார்களுக்கான மிகப்பெரிய மற்றும் நீண்ட காலமாக இயங்கும் மாதாந்திர ஒரு குலுக்கல் ஆகும்.
இந்த டிக்கெட்டுகளை ஆன்லைனிலோ அல்லது அபுதாபி சர்வதேச விமான நிலையத்திலோ பெற்று கொள்ளலாம்.
ஒவ்வொரு மாதமும் 3-ஆம் திகதி அபுதாபி சர்வதேச விமான நிலையத்தின் வருகை நுழைவாயிலில் இந்த குலுக்கல் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. டிக்கெட்டின் வழக்கமான விலை 500 டொலர் வரை இருக்கும் என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.