தொடர்ந்து 20 நாட்கள் தலைமறைவாக இருந்து, கடந்த வெள்ளிக்கிழமை பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கிம் ஜாங் வுன் சிகிச்சை ஏதும் எடுத்துக் கொள்ளவில்லை என தென் கொரியா தெரிவித்துள்ளது.
கிம் ஜாங் வுன் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்ததால், அவர் மாரடைப்பு காரணம் இதய சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார் என்ற தகவல் வெளியானது.
இதனையடுத்த சில தினங்களில் அவர் இறந்துவிட்டார் எனவும், அல்லது மிகவும் மோசமான நிலையில் நகரவே முடியாமல் உள்ளார் எனவும் தகவல் பரவியது.
இந்த நிலையில் திடீரென்று கடந்த வெள்ளிக்கிழமை, பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கிம் ஜாங், உர ஆலை ஒன்றையும் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் வடகொரிய ஊடகங்கள் நேரலை செய்ததுடன், அவர் ஆலையை சுற்றிப்பார்க்கும் புகைப்படங்களையும் வெளியிட்டன.
ஆனால் தற்போது கிம் ஜாங் வுன் இந்த 20 நாட்களில் என்ன செய்தார் என்பது தங்களுக்கு தெரியும் என தென் கொரிய உயர் அதிகாரி ஒருவர் சூசகமாக தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி கிம் ஜாங் எந்த விதமான சிகிச்சையிலும் இருக்கவில்லை எனவும், அவர் உடல் நிலை தொடர்பில் வெளியான அனைத்து தகவலும் வதந்தியே என தெரிவித்துள்ளார்.
தென் கொரிய ஜனாதிபதியின் உயர்மட்ட குழுவில் பணியாற்றிவரும் அந்த அதிகாரி வெளியிட்டுள்ள இந்த தகவல் தற்போது கிம் ஜாங் தொடர்பிலான மர்மத்தை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.
இதனிடையே Yonhap என்ற செய்தி நிறுவனம், கிம் ஜாங் சிகிச்சை ஏதும் எடுத்துக் கொள்ளவில்லை என்பதை உறுதி செய்துள்ளது.
மட்டுமின்றி அவரது மணிக்கட்டில் இருக்கும் மர்மமான அடையாளம் தொடர்பில் உறுதியான தகவல்களை வெளியிடவும் மறுத்துள்ளனர்.