தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் மக்கள் நடமாட அனுமதி வழங்கப்படும் செயற்பாடு எதிர்வரும் திங்கட் கிழமை (11) முதல் நடைமுறைக்கு வருமென பொலிசார் அறிவித்துள்ளனர்.
திங்கட்கிழமை முதல் இந்த நடைமுறை அமுலில் இருக்கும் என பொலிசார் தெரிவித்தனர். திங்கட்கிழமை மேல் மாகாணத்தில் இயல்பு வாழ்க்கை ஆரம்பிக்க அரசு நடவடிக்கையெடுத்து வரும் நிலையில், கொரோனா அபாயத்தை தடுக்க இந்த நடைமுறை அமுலாகிறது.
ஊரடங்கு சட்டம் அமுலாகும் பகுதிகளிலேயே இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படும்.
பணிக்கு செல்பவர்கள் தமது அடையாள அட்டைகளை காண்பித்து பயணம் செய்யலாம்.


















