கிழக்கு லண்டனில் கும்பல் ஒன்று குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்து 11 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு லண்டனில் அப்மின்ஸ்டர் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் வெள்ளிக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 9.30 மணியளவில் இந்த திகிலூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது.
அழைப்பு மணி சத்தம் கேட்டு 45 வயதான தந்தை கதவு திறந்துள்ளார். ஏதேனும் பொருள் டெலிவரி செய்ய வந்தவர்கள் என்றே அவர் நம்பியுள்ளார்.
ஆனால் திடீரென்று நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று குடியிருப்புக்குள் புகுந்ததுடன், அப்போது வீடியோ ஹேம் ஆடிக்கொண்டிருந்த 11 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்டு, குடியிருப்பில் உள்ளவர்களுக்கு மரண பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
மட்டுமின்றி தங்களுக்கு பாதுகாப்பு பெட்டகத்தில் மறைத்து வைத்துள்ள பணம் வேண்டும் எனவும் கத்தியுள்ளது அந்த கும்பல்.
மேலும், கதவை திறந்த அந்த தந்தையின் தலையிலும் கத்தியால் தாக்கியுள்ளது. குடியிருப்பில் உள்ள பெண்மணி ஒருவரின் கழுத்திலும் அந்த கும்பலில் ஒருவர் கத்தியை வைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது.

நான்கு நிமிடங்களில் நடந்த களேபரத்தின் முடிவில் அந்த கும்பல் வெளியேறுயதும், துப்பாக்கி குண்டுக்கு இலக்கான சிறுவனின் தந்தை தலையில் இருந்து ரத்தம் வழைய குடியிருப்புக்கு வெளியே வந்து சாலையில் நின்று உதவிக்கு கெஞ்சியுள்ளார்.
அப்போது காரில் வந்த ஒருவரும், சிறுவனின் தந்தைக்கு அறிமுகமான நபர் ஒருவரும் உதவி செய்ய முன்வந்துள்ளனர்.
தொடர்ந்து மருத்துவ உதவிக்குழுக்களும் பொலிசாரும் சம்பவ பகுதிக்கு வந்து சேர்ந்ததாகவும், நடந்தவற்றை பொலிசாரிடம் தெரிவித்துள்ளதாகவும் சிறுவனின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.
சிறுவன் தற்போது ஆபத்து கட்டத்தை தாண்டியுள்ளதாகவும், ஆனால் அந்த காயங்கள் அவனுக்கு ஆயுள் முழுக்க இருக்கும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.