கொடிகாமம் கெற்பேலி தனிமைபடுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
கொடிகாமம் கெற்பேலி தனிமைபடுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த பண்டாரநாயக்கா மாவத்தை கொழும்பு 12ஐ சேர்ந்த பாத்திமா அன்சி மொஹமட் சுல்தான் என்ற வயது 78 உடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொரோனோ தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் கொழும்பிலிருந்து கொண்டு செல்லப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் கொடிகாமம் கெற்பலி தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த வயோதிப பெண் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த 2 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவருக்கு கொரோனோ தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் சாதாரண விடுதிக்கு அவர் மாற்றப்பட்டிருந்தார்.
இந் நிலையில் அவருக்கு ஏற்பட்ட முட்டு காரணமாக அவர் நேற்று யாழ்.போதனா வைத்திய சாலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதே வேளை உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் எல்லோரும் கொடிகாமம் மற்றும் பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.