ஊரடங்கு சட்டத்திற்கு புறம்பாக செயற்பட்ட 46 ஆயிரத்து 842 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து 12 ஆயிரத்து 152 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் ஊடரங்கு அமுல்படுத்தப்பட்டதுடன், 46 நாட்களாக தளர்த்தப்பட்டு மீண்டும் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இடர் வலயங்களைத் தவிர்ந்த ஏனையப்பகுதிகளில் இன்று புதன்கிழமை ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்ததுடன், இரவு 8 மணிமுதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஊரடங்கு மீண்டும் அமுல் படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊரடங்கு சட்டத்திற்பு புறம்பாக செயற்பட்டதாக இன்று காலை ஆறுமணி வரையிலான 24 மணித்தியாலத்திற்குள் மாத்திரம் 558 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 139 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஊரடங்கு அமுல்படுத்தி கடந்துள்ள 46 நாட்களுக்குள் மாத்திரம், ஊரடங்கு சட்டத்திற்கு புறம்பாக செயற்பட்டதாக 46 ஆயிரத்து 842 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களிடமிருந்து 12 ஆயிரத்து 152 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.