பௌத்த தர்மத்தை பாதுகாக்க அரசாங்கமாக உறுதியளித்த போதிலும் நாளை வெசாக் தினத்தை கொண்டாட முடியாத நிலை தோன்றியுள்ளது.
வெசாக் தினம் சிங்கள மக்களுக்கானது மட்டுமல்ல, உலகத்தில் பல்வேறு மதங்கள் மற்றும் இனங்களின் மதிப்பை பெற்ற தினமாகும். ஆகவே வெசாக் தினம் உலக விடுமுறை தினமாக கொண்டாடப்படுகின்றது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
அலரி மாளிகையில் இன்று பௌத்த மத தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் உரையாற்றிய அவர்,
வெசாக் தினத்தில் இலட்சக்கணக்கான மக்கள் வழிபடுகளை மேற்கொள்ளும் தினமாகும். மேலும் நாடு முழுவதிலும் வெசாக் கூடுகளினால் அலங்கரிக்கப்பட்டு தன்சல்கள் வழங்கப்படும்.
அதனால் வெசாக் தினத்தை கொண்டாடுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்னிருந்தே அனைத்து மக்களும் தயார் நிலையில் இருப்பர்.
கடந்த வருடத்திலும் வெசாக் தினம் கொண்டாட முடியாது போனது. இந்த நிலையில் வெசாக் தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகிய பின்புலத்தில் அனைத்து மக்களும் பாரிய மனஉலைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
ஆனால், பௌத்த மக்களின் பாரிய எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாது போனது.
இருப்பினும், வெசாக் தினத்தை கொண்டாட முடியாத நிலைமைக் குறித்து புரிந்து கொள்ள வேண்டும். தற்போது அந்த பூரணை வந்துள்ளது.
புத்த பகவானின் தர்மத்தை உணர்ந்தவர்கள் அந்த மார்க்கத்தை ஏற்றுக்கொள்பவர்கள் இந்த அழிவுகளைக் கண்டு கவலையடைய மாட்டார்கள் என்பதை நான் அறிவேன். கொவிட் 19 தொற்றை இயற்கையை உணர்வதற்கு ஆதாரமாகக் கொள்ளுங்கள்
ஆனால் இந்த தொற்றானது இயற்கையினால் உலக விலங்குக்கு வழங்கிய தண்டனையென சிலர் கூறுகின்றார்.
அதனால் தற்போது கொரோனா தொற்று ஒழிப்புக்கு எதிராக செயற்படுவோருக்கு தண்டனை வழங்க வேண்டுமென ஒரு சிலர் போராடுவதாக நாங்கள் அறிந்துள்ளோம்.
ஆனால், நாங்கள் யாருக்கும் தண்டனை வழங்க மாட்டோம். இதனை இயற்கை கொடுத்த தண்டனையாகவும் ஏற்கவும் மாட்டோம்.
உலகில் யாரும் பலமானவர்கள் அல்ல. உலகில் யாரும் பலமானவர்கள் என்றாலும் உலகத்தை மாற்ற முடியாது. மரணம் என்பது அனைவருக்கும் பொதுவானது என்பதால் இந்த கொரோனா தொற்றினால் உலகிலுள்ள பலம் பொருந்திய நாடுகளிலுள்ள பலமானவர்கள் கூட பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
உலகிலுள்ள பலமான தலைவர்களுக்கும் இந்த கொரோனா தொற்றிலிருந்து மீள முடியாதுள்ளனர்.
இயற்கையை மாற்றுவதாகக் கூறியவர்களுக்கும் இன்று உலகத்தின் இயற்கைக்கு முன்னால் மண்டியிட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.