வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் தன்னைப் போன்று தோற்றமளிக்கும் கொண்ட நபரை பயன்படுத்துகிறாரோ என்ற சந்தேகெம் இப்போது வலுக்க ஆரம்பித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தும் நாடாக வடகொரியா உள்ளது. ஏனெனில் பல்வேறு நாடுகள் அணு ஆயுத சோதனைகள் செய்ய வேண்டாம் என்று கூறிய போதும், தன்னுடைய பலத்தை நிரூபிப்பதற்காக, மீண்டும், மீண்டும் சோதனை செய்தது.
இது அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஒரு வித பயத்தை ஏற்படுத்தியது. அதன் பின் தன் நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடை காரணமாக இந்த அணு ஆயுத சோதனை எல்லாம் வடகொரியா நிறுத்தி வைத்திருந்தது.
அதன் பின் அமெரிக்கா பொருளாதார தடையை நீக்காததால், மீண்டும் தன்னுடைய பலத்தை காட்ட அணு ஆயுத சோதனையை அவ்வப்போது செய்து வருகிறது. இதன் மூலம் வடகொரியா அதிபர் பலரை பகைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இதனால் கண்ணுக்கு தெரியாத எதிரிகள், துரோகிகள் மற்றும் படுகொலையில் இருந்து தப்பிப்பதற்கு கிம் தன்னைப் போன்று தோற்றமளிக்கும் கொண்ட நபரை பயன்படுத்துகிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஹிட்லர் மற்றும் சதாம் உசேன் உள்ளிட்ட சர்வாதிகாரிகள் பல தன்னைப் போன்று தோற்றமளிக்கும் நபர்களை பயன்படுத்தியதாக கோட்பாடுகள் நம்புகின்றன. அதே பாணியை கிம் பயன்படுத்தலாம் என்று நம்பப்படுகிறது.
ஏனெனில் சமீபத்தில் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கிம் தொழிற்சாலை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டார்.
இந்நிலையில் தொழிற்சாலை திறக்க வந்த போது, எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் பழைய புகைப்படங்கள் இரண்டுமே ஒப்பிட்டு சமூகவலைத்தளங்களில் பல விவாதங்கள் செல்கிறது. அதில் பல், முகத்தில் இருக்கும் சுருக்கம், முடி போன்றவை என்று குறிப்பிடப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு ஏவுகணை சோதனை நடத்தப்படுவதற்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது.
அதில் கிம்முடன் இருக்கும் நபர் அவரைப் போன்றே தோற்றமளிக்கும் உடை அணிந்துள்ளார். அவரின் கால்பேண்ட்டின் குதிகால் அப்படியே கிம் உடை போன்றும், முடிவெட்டும் கூட அவருடன் ஒத்துப் போவதாக குறிப்பிட்டுள்ளது.
இதனால் கிம்மின் இறப்பு செய்தி போய், தற்போது தன்னைப் போன்ற ஒரு நபரை பயன்படுத்துகிறாரா என்ற சந்தேகம் எழுத் துவங்கியுள்ளது.