திருப்பூரில் குடை பிடித்து சமூக இடைவெளியுடன் எப்படி மது வாங்குவது என குடிமகன் ஒருவர் ட்ரையல் பார்க்கும் காணொளி ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
திருப்பூர் மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கும் போது குடை பிடித்து வந்தால் தான் மது விற்பனை செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் தடுப்புகள் அமைத்து 6 அடிக்கு ஒருவர் நிற்பது போல் கட்டைகள் கட்டி வட்டம் வரைந்து தீவிர முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இதனிடையே, மதுப்பிரியர் ஒருவர் குடை பிடித்து சமூக இடைவெளியுடன் ஒவ்வொரு தடுப்பதாக தாண்டி மதுவை எப்படி வாங்குவது என முன்னோடட்ம் பார்த்துள்ளார். இந்த காணொளி தற்போது தீயாய் பரவி வருகின்றது.
திருப்பூரில் குடையுடன் வந்தால் மட்டுமே மது விநியோகம் செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. குடையுடன் தடுப்புகளை கடந்து மது வாங்க "சோதனை நடை" நடந்து பார்க்கும் காட்சி…..@News18TamilNadu @mahajournalist pic.twitter.com/iK9XUZuX6o
— Gurusamy (@gurusamymathi) May 6, 2020




















