ஆகாயம் அளவுக்கு உயர்ந்த கடல்நீர் சுனாமியாக பார்த்திருக்கின்றோம், கேள்விப்பட்டிருக்கின்றோம்.
ஆகாயத்தை மறைத்து ஒரு நகரத்தையே சூழ்ந்த மணல் புயலைப் பார்த்த்துண்டா? கடந்த சில தினங்களுக்கு முன் வட ஆபிரிக்காவின் நைஜர் என்ற நகரத்தில் மணல்புயல் ஏற்பட்டு ஆகாயம் அளவு உயர்ந்து நகர்ந்து அந்த நகரத்தையே சூழ்ந்துள்ளது.
வறட்சியான இடங்களில் இந்த மாதிரி மணல் புயல் ஜனவரி முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதியில் ஏற்படுவதுண்டு.
புழுதிப் புயல் வறண்ட பகுதிகளில் ஏற்படும் ஒரு வானியல் நிகழ்வாகும். இது காற்று மண்டலத்தின் வேகம் ஒரு குறிப்பிட்ட வேகத்தை விட அதிகரிக்கும் போது மணல் மற்றும் தூசிகளை வறண்ட நிலங்களில் இருந்து அகற்றி தன்னுடன் எடுத்துச் செல்வதால் ஏற்படுகிறது.
இந்நிகழ்வின் போது மணல் துணிக்கைகள் ஓரிடத்தில் இருந்து அகற்றப்பட்டு வேறோர் இடத்தில் குவிக்கப்படுகின்றன.
அராபியத் தீபகற்பத்தை அண்டியுள்ள சகாரா மற்றும் பாலைவனங்கள் புழுதிப்புயலை உருவாக்கும் முக்கிய பகுதிகளாகும்.
இவற்றைவிட அரபிக்கடலை அண்டியுள்ள ஈரான், பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளின் பகுதிகளிலும், மற்றும் சீனாவிலும் குறைந்த அளவில் புழுதிப்புயல் ஏற்படுகின்றன.
இவ்வாறான புழுதிப் புயல் ஏற்பட்டால் நிலம் தரிசாக மாறிவிடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடந்த 2009 இல் தெற்கு அவுஸ்திரேலியாவில் தொடங்கிய புழுதிப்புயல் நியூ சவுத் வேல்சில் சிட்னி நகரை மூடி நகரின் வான்பரப்பை கரும் செம்மஞ்சள் நிறமாக்கி பின்னர் வடக்கு நோக்கி குயின்ஸ்லாந்து வரை நகர்ந்தது 2011 இல் வடக்கு செருமனியில் பெரும் மணற்புயல் திடீரென நெடுஞ்சாலை ஒன்றைத் தாக்கியதில் சாலையில் பயணித்த 80 இற்கும் அதிகமான வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாயின.
இவ்விபத்தில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டுப் பலர் காயமடைந்தனர் என்பதும் குறிப்பிட்த்தக்கது. இந்த காணொளி வைரலானதில் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.