விசாகப்பட்டினம் அருகே ரசாயன ஆலையில் ஏற்பட்ட வாயுக்கசிவு காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தில் எல்ஜி பாலிமர்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலை உள்ளது.
இதிலிருந்து இன்று விஷ வாயு கசிந்ததில் பல மீட்டர் பகுதிகளுக்கும் பரவியுள்ளது, இதனை மக்கள் சுவாசித்ததால் கண் எரிச்சல், மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டுள்ளனர், சிலர் மயங்கி விழுகின்றனர்.
இதுவரையிலும் ஐந்து பேர் பலியாகியுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து ஆலையை சுற்றியுள்ள மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.
Andhra Pradesh: Chemical gas leakage reported at LG Polymers industry in
RR Venkatapuram village, Visakhapatnam. People being taken to hospital after they complained of burning sensation in eyes&breathing difficulties. Police, fire tenders, ambulances reach spot.Details awaited. pic.twitter.com/uCXGsHBmn2— ANI (@ANI) May 7, 2020



















