நாட்டில் மாவட்டங்களுக்கிடையில் மக்கள் போக்குவரத்துத் தொடர்பான கட்டுப்பாடுகள் அடுத்த சில நாள்களுக்குள் அதிசிறப்பு வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்படும் என்று பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.
இந்தக் கட்டுப்பாடுகள் தொடர்பில் நாளை அல்லது நாளைமறுதினம் சனிக்கிழமையன்று விளக்கமளிப்பதாகவும் அவர் கூறினார்.
நோய்த்தொற்று இல்லாத வலயத்திலிருந்து நோய்த்தொற்று இல்லாத பகுதிக்கு வருவது சிக்கலானது அல்ல என்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குள் நுழையவோ அல்லது வெளியேறவோ முடியாது என்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.