மட்டக்களப்பில் தினம் மாடு திருடர்களால் இறைச்சிக்காக களவாடப்படுவதால் கால்நடை வளர்ப்பை கைவிடும் தமிழரின் அவலம் நோன்பு பெருநாளுக்காக தமிழ்கிராமங்களில் மாடுகளை திருடச்சென்ற ஏறாவூரை சேர்ந்த முஸ்லிம் கும்பல் சந்திவெளி திகிலிவெட்டையில் மடக்கிபிடிக்கப்பட்டுள்ளனர்,
தற்போது கொரோனா நோய் அச்சம் காரணமாக ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போது எந்த ஒரு பதற்றமின்றி வழமை போல வாகனத்தில் மாடுகளை திருடிச்செல்ல ஏறாவூரிலிருந்து 25km தூரமுள்ள சந்திவெளி ஊடாக ஆற்றை தாண்டி செல்லும் திகிலிவெட்டை கிராமத்தில் மாடுதிருட சென்ற கும்பல்களை கையோடு நேற்று இரவு கைதுசெய்துள்ளார்கள்.
இவர்களுக்கு தரகர்களாக செயற்பட்ட இரு தமிழரும் உடந்தையாக இருந்தமை தெரியவந்துள்ளது,
நோன்பு பெருநாளுக்காக ஏழைகளின் மாடுகளை திருடி அதை கொலை செய்து உண்டு ஒரு களியாட்டம் கொண்டாடுவது மனித குலத்திற்கு ஒப்பானததா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மாடு வளர்ப்பவர்கள் மாட்டை வாங்க வட்டிக்கு வங்கியில் கடன் எடுத்து அதனை வளர்க்க எத்தனை இரவு கண்முழித்து யானைகளின் தாக்குதலுக்கு கூட உயிரை துச்சமாக மதித்த காட்டில் தமது குழந்தை போல பராமரிக்கின்றார்கள்.
ஆனால் இந்த திருடனுகள் ஒரு இரவிற்குள் எல்லாவற்றையும் திருடி மாடு வளர்ப்பாளரை நடுவீதியில் கொண்டு வந்து விரக்தியில் விளிம்பில் தற்கொலை செய்ய தூண்டுகின்றார்கள்,.
உடம்பை வருத்தி தொழில் செய்யாமல் மற்றையவனின் பொருளை திருடி தான் மாத்திரம் வாழ்ந்தால் பறிகொடுத்தவன் நிலை அவன் நிர்க்கதியாகி தற்கொலைதான் பண்ண வேண்டி வரும் .அத்தோடு ஒரு மாவட்டத்தில் கால்நடைகளின் வளர்ப்பிற்கு முன்வருபவர்கள் அருகி சென்றால் அதன் இழப்பை ஈடுகட்டுவது கடினம்.