யாழ்.வடமராட்சி கிழக்கு – நாகர்கோவில் பகுதியில் நேற்று நள்ளிரவு வீடொன்றுக்குள் புகுந்த இராணுவத்தினரை அங்கிருந்த தமிழ் மக்கள் திட்டி விரட்டிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
இதன்போது இராணுவத்தினர் வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தியுள்ளதுடன், சிலர் மீது கடுமையான தாக்குதல் நடாத்தியிருப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர்.
நேற்று நள்ளிரவும் குறித்த இளைஞனின் வீட்டுக்குள் படையினர் நுழைந்துள்ளனர்.
எனினும் இளைஞன் வீட்டில் இல்லாத நிலையில் வீட்டில் இருந்தவர்களை மோசமாக அச்சுறுத்தியுள்ளதுடன் தாக்குதலும் நடாத்தியுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.
தை பொங்கல் தினத்தில் இராணுவத்தினருடன் தர்க்கம் நடைபெற்றிருந்தபோது அதில் முன்னின்ற இளைஞன் ஒருவனை இராணுவம் தீவிரமாக தேடிவருகின்றது. எனினும் அவனை இதுவரை கைது செய்ய முடியாத நிலையில் பல தடவைகள் அவருடைய குடும்பத்தார் அச்சுறுத்தப்பட்டும், தாக்கப்பட்டும் உள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுக்க சென்றால், நீதிமன்றில் அவ்வாறு ஒரு நபரே இல்லை, நாங்கள் தேடவும் இல்லை என கூறிய பொலிஸார், காரணமே இல்லாமல் குறித்த இளைஞனை தங்களிடம் ஒப்படைக்குமாறு குடும்பத்தினரிடம் கேட்பதாகவும், முறைப்பாட்டை பெற பின்னடிப்பதாகவும் மேலும் தெரிவிக்கபப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.