சர்வதேச கண்காணிப்பாளர்கள் இன்றி அரசாங்கம் தேர்தலை நடத்த முற்சிப்பது ஜனநாயக விரோத செயலாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறியதாவது,
இன்று சர்வதேசமே கொரோனா என்ற கொடிய நோயின் போர்வைக்குள் மூடிகிடக்கின்றது. சர்வதேச விமான சேவைகள் அனைத்தும் இரத்த செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அரசாங்கம் அவசர அவசரமாக பொதுத் தேர்தலை நடத்துவதற்கான திகதியை குறித்துள்ளமை சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
பொதுத் தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் தேர்தலை கண்காணிப்பதற்காக சர்வதேச கண்காணிப்பு குழுவினரோஇ ஐரோப்பியா உன்றிய நாடுகளின் கண்காணிப்பு குழுவினரோ இங்கு வருவதற்கான சூழ்நிலை இல்லை.
முழு உலகமே முழு உலகமே இன்று கொரோனா பீதியில் இருக்கின்றது. இந்நிலையில் தேர்தல் அவசியமா என்ற கேள்வி எழுந்திருக்கின்றது.