தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஊடக்கப்பேச்சாளர் எனும் பதிவியை வகித்துவரும் சுமந்திரன் அவர்கள் அண்மைக்காலமாக தமிழ் மக்களிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கிய விடுதலைபுலிகளிற்கும் எதிராக விசமத்தனமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.
அத்துடன் 45000 மேற்பட்ட மாவீரர்கள் 1,40 000 மேற்பட்ட பொதுமக்களை இழந்த ஒரு தேசிய இனத்தை தொடர்ச்சியா மானபங்கப்படுத்தும் வகையில் சுமந்திரனின் தெரிவிக்கும் கருத்துக்கள் ஒட்டுமொத்த தமிழ்மக்கள் மத்தியில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமல்லாது தன்னை ஒரு சிங்கள் தேசியகட்சியின் பிரதிநிதிபோல நினைத்து அனைத்து அரசியல் நகர்வுகளையும் செய்துவருகின்றார்.
இந்தநிலையில் இப்படிப்பட்ட ஒருவரிடம் இருந்து எந்த ஒரு மறு பரிசீலனையும் இல்லாமல் உடனடியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் என்ற பதவியை பறிமுதல் செய்யவேண்டும் என வடக்குகிழக்கு தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னனியின் சுயாதீன அணி பகிரங்கமாக கோரியுள்ளது.
இதேவேளை கடந்த 2015 இற்கு முன்னர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் கட்சியின் ஊடகப்பேச்சாளர் பதவியை தவறாக பயன்படுத்தினார் என்பதன் அடிப்படையில் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் அவர்மீது பல குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.