கேரளாவை சேர்ந்த மாணவி ஒருவர், தான் பெற்றோருடன் சேர்ந்ததற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்ட திமுக எம்.பி. சுமதி என்ற தமிழச்சி தங்கப்பாண்டியனுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது. இதனால் தங்கள் சொந்த ஊரை விட்டு வெளிமாநிலங்களுக்கு வந்த பலரும் சிக்கிக் கொண்டனர்.
அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். சிறப்பு இரயில்கள் மூலம் சென்றாலும், இன்னும் பலர் தங்கள் ஊருக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில், கேரள மாநிலம் அக்கமாலி பகுதியை சேர்ந்த சிறுமி எல்லீஸ் என்பவர் பள்ளி விடுமுறையின் காரணமாக, சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.
இந்த நேரத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்படவே, அவர் தன்னுடைய பெற்றோரை நேரில் காண முடியாமல் தவித்து வந்துள்ளார்.
சிறுமியின் பெற்றோரும் தங்கள் மகளை பார்க்க முடியாமல் தவித்து வந்ததால், அவர்கள்
சாலக்குடி பகுதி எம்.பி. பென்னி பகனனை தொடர்பு கொண்டு உதவும் படி கேட்க, அவர் உடனடியாக தெற்கு சென்னை திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியனை தொடர்பு கொண்டு உதவி கேட்டார்.
On request of Chalakudy (KL) MP Mr.@BennyBehananMP, I took necessary actions for the safe return of Ellis, a Kerala girl, who was stranded in Chennai back to her home. She shared her warm message of happiness after re – union with her parents. ❤#OndrinaivomVaa pic.twitter.com/dIuUQsCk6B
— தமிழச்சி (@ThamizhachiTh) May 9, 2020
இதையடுத்து, அந்த சிறுமி தொடர்பான விபரங்கள் தமிழச்சிக்கு அளிக்கப்பட்டதால், உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு சிறுமி எல்லீசை, அவரது பெற்றோருடன் சேர்வதற்கான வழிவகைகளை மேற்கொண்டார்
இதன் பலனாக, சிறுமி எல்லீஸ், தனது பெற்றோருடன் இணைந்தார்.
இதையடுத்து அந்த சிறுமி, தான் பெற்றோருடன் சேர்ந்ததற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்ட திமுக எம்.பி. சுமதி (என்ற) தமிழச்சி தங்கபாண்டியனுக்கு சிறுமி எல்லீஸ், நன்றியை, வீடியோ பதிவாக வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவை, தமிழச்சி, தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.