யாழ்ப்பாணம் புத்தூர் கிழக்கில் வீட்டு வளவுக்குள் மண்ணுக்கு புதைத்து வைத்து சட்டத்துக்குப் புறம்பாக அரச சாராயத்தை விற்பனை செய்த குற்றச்சாட்டில் குடும்பத்தலைவர் ஒருவர் அச்சுவேலி பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டார்.
இதன்போது சந்தேக நபரிடமிருந்து 180 மில்லி லீற்றர் எடையுடைய 200 போத்தல்களும் மென் மதுபானம் 48 தகரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சந்தேக நபர் வீட்டில் வைத்து சட்டத்துக்குப் புறம்பாக அரச சாராயத்தை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது வீட்டு வளவுக்குள் நூதமான முறையில் மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 180 மில்லி லீற்றர் எடையுடைய 200 போத்தல்களும் மென் மதுபானம் 48 தகரங்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் கைதான சந்தேக நபர் விசாரணைகளின் பின்னர் நாளை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் எனவும் பொலிஸார் கூறினர்.