மக்களால் வெறுக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதால் எவ்வித நன்மையும் ஏற்படாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
அத்துடன் நெருக்கடி நிலையிலும் எதிர்தரப்பினர் குறுகிய அரசியல் நோக்கங்களை கொண்டு செயற்படுவது வெறுக்கத்தக்கது எனவும் அவர் குறிப்பிட்டார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் , கொரோனா வைரஸ் ஒழிப்புக்கும், மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் அரசாங்கம் உரிய நடவடிக்கையினை முன்னெடுத்து வெற்றியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும் கொரோனா வைரஸை காரணம் காட்டி கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை கூட்டுமாறு எதிர்தரப்பினர் தொடர்ந்து அழுத்தம் பிரயோகிக்கின்றதாகவும், அவர்கள் குறிப்பிடுவது பொருத்தமற்ற காரணிகளை மாத்திரம் உள்ளடக்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும் மக்களால் வெறுக்கப்பட்ட பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான அவசியம் அரசியலமைப்பின் பிரகாரம் தோற்றம் பெறவில்லை என்றும் ஜனாதிபதி கோட்டாபய எக்காரணிக்காகவும் பாராளுமன்றத்தை கூட்டமாட்டார் எனவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.