கர்ப்பத்தின் போது உறவு கொள்வது குறித்து, பலர் பல கதைகள் கூறியிருப்பர்கள். அவற்றில் எதை நம்புவது அல்லது நம்பாமல் இருப்பது என ஆண்களும் பெண்களும் குழம்பிப் போயிருப்பர்.
பொதுவாக, குழந்தை உருவான முதல் மூன்று மாதங்கள் மற்றும் குழந்தை பிறப்பதற்கு முன்னான ஒரு வாரம் என உறவு கொள்ளாமல் இருப்பது நல்லது.
கர்ப்பத்தின் போது உறவு கொள்வது குறித்து நிலவும் சில கேலிக்குரிய கட்டுக்கதைகளை சிலவற்றை பற்றி இங்கு பார்ப்போம்…
முதல் மூன்று மாதம் தான் கர்ப்பத்தின் முக்கிய காலக்கட்டமாகும். இந்த சமயத்தில் கர்ப்பத்தின் உறுதித்தன்மை குறைவு. ஆகையால்தான் முதல் மூன்று மாத காலத்திற்கு உறவு வேண்டாம் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகிறார்கள்.
எனினும் கர்ப்பம் தரித்த பெண்ணுக்கு உறவில் இன்பம் குறைந்தே காணப்படும். முதல் மூன்று மாதத்திற்குப் பின் பெண் சம்மதித்தால் உறவில் ஈடுபடலாம். அதில் தவறு ஏதும் இல்லை.
ஆனால் மிகவும் எச்சரிக்கையாக உறவு கொள்ள வேண்டும். முரட்டுத்தனமாக இருக்கக் கூடாது. மிகவும் வசதியான நிலையில் பெண் இருக்கும் போது உறவு கொள்ளல் வேண்டும். ஆணின் உடல் எடை எந்த வகையிலும் பெண்ணை அழுத்தக் கூடாது.
அதிக உணர்ச்சிவயப்படுதலோ, அதிக நேரம் உறவு கொள்வதோ பெண்ணை சீக்கிரம் களைப்படையச் செய்து விடும். அதனையும் கவனத்தில் கொள்வது அவசியம்.
மேலும், உறவின் போது பெண்ணின் கர்ப்ப வாயில் ஏதேனும் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று தற்போது மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்.
அதற்காக கவலைப்பட வேண்டாம், உறவுக்கு முன்பும், பின்பும் இருவருமே உறுப்புகளை சரியாக சுத்தம் செய்திருக்க வேண்டும். கூடுமானவரை ஆணுறைப் பயன்படுத்தி உறவுக் கொள்வது பிறக்கப் போகும் குழந்தையின் உடல் நலத்தை பாதுகாக்க வழி செய்யும்.
கர்ப்பிணின் பெண்கள் உடல் மற்றும் மன அளவில் தயாராக இருக்கும் வரை உறவு கொள்ளலாம்.
8 அல்லது 9வது மாதங்களில் உறவுக் கொள்ளும் போதுதான் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கர்ப்பத்தின் 8 அல்லது 9வது மாதத்தில் உறவுக் கொள்வது உடலுறுப்புக்களை தளர்த்தியாக வைக்க உதவுகிறது.
எனினும், சிலருக்கு கர்ப்பப் பை பலவீனமாக இருப்பதாகவும், சிலர் படுத்த நிலையிலேயே கர்ப்ப காலத்தைக் கழிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தால் அவர்கள் மருத்துவரை கலந்தாலோசித்த பின்னரே உறவு கொள்ள வேண்டும்.
2. வயிற்றுப் பகுதியின் நிலை;
உறவின் போது, வயிற்றுப்பகுதி சுருங்காமலும், அதில் எந்த அழுத்தமும் இருக்காதவாறு பாதுகாப்புடன் இருப்பது நல்லது. அப்படி ஏற்பட்டால், கருக்கலைப்பு அல்லது குழந்தையின் உடல் பாகங்களில் பாதிப்பு ஏற்பட்டு, ஊனமாகும் நிலை ஏற்படலாம்.
3. குழந்தை பிறப்பிற்கான வாய்ப்பு;
குழந்தை பிறப்பு நெருங்கும் காலகட்டத்தில், உறவு கொண்டால், குறைமாதத்தில் குழந்தை பிறக்க வாய்ப்புகள் உள்ளது. சில சமயங்களில், உடலுறவு கொள்ளும் போது, குழந்தை பிறப்பினை தூண்டச் செய்துவிடும்.
ஆகையால், உறவுக் கட்டுப் பாட்டுச் சாதனமான காண்டம் போன்றவற்றின் உதவியுடன் உறவில் ஈடுபடலாம்.
4. வலி உண்டாகலாம்;
நீங்கள் உறவில் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதை பொறுத்தே உங்களின் வலி, இன்பம், துன்பம் எல்லாம். நீங்கள் தீவிரமாக ஈடுபட்டால், உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் தீவிரமான விளைவு, வலி ஏற்படலாம்; மெதுவாக ஈடுபடும் போது எவ்வித பாதிப்புமின்றி இன்பத்தை அனுபவிக்கலாம்.
எனவே, பாதுகாப்பான மென்மையான உறவே சிறந்தது. உங்களுக்கும் உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவதானமாக இருவரும் இணைதல் ஆரோக்கியம் தரும்.