சுமந்திரன் போன்ற புல்லுருவிகளை தமிழ் மக்கள் களையெடுக்க வேண்டும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
கல்முனையில் செய்தியாளர்களை இன்று சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்தின் நேற்று பிரதமரை சந்தித்துள்ளார்.
உண்மையாக அரசியல் கைதிகள் விடுவிக்க பட வேண்டியவர்கள். அதற்காக வேண்டித்தான் நாங்கள் பொதுஜன பெரமுன விற்கு ஆதரவாக பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தோம். அதனை ஒரு கோரிக்கையாக வைத்திருந்தோம். அதனை அவர்களும் ஏற்றுக் கொண்டிருந்தார்.
சட்ட நடவடிக்கைகளை ஆராய்ந்து பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இதற்கிடையில் சுமந்திரன், நல்லவர் போன்று பல தியாகங்களை தமிழ் மக்களுக்கு புரிந்தவர் போன்று பிரதமரை சந்தித்து அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும், காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என மனுவை வழங்கியிருக்கிறார். இதனை தமிழ் மக்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.
எதிர் கட்சி தலைவராக சம்பந்தன் இருந்தும் கூட அரசியல் கைதிகளை விடுவிக்கப்படவில்லை. அன்று இருந்த ரணில் அரசாங்கத்திடம் அதிகாரம் மிக்கவர்களாக இருந்த கூட்டமைப்பினர் நினைத்திருந்தால் அரசியல் கைதிகளை விடுவித்திருக்க முடியும்.
தேர்தல் காலங்களில் கூட்டமைப்பின் நாடகங்கள் அரங்கேறுவது உண்மையான விடையம் சுமந்திரன் போன்ற புல்லுருவிகளை தமிழ் மக்கள் களையெடுக்க வேண்டும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது தமிழ் மக்கள் மத்தியில் போராட்டத்தை விற்று பிழைப்பு நடார்த்துபவர்களாக இருந்தார்கள் . தமிழ் மக்களிடையே நேசிப்பவர்களாக போராட்டத்தை ஆதரிப்பவர்களாக தங்களை வெளிப்படுத்தினார்கள்.
இன்று பல அரசியல் கட்சிகள் செயற்பட்டு வருகின்றது. குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது தமிழ் மக்கள் மத்தியில் போராட்டத்தை விற்று பிழைப்பு நடாத்துபவர்களாக இருந்தார்கள். தமிழ் மக்களிடையே நேசிப்பவர்களாக போராட்டத்தை ஆதரிப்பவர்களாக தங்களை வெளிப்படுத்தினார்கள்.
ஆனால் இடையிடையே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், சுமந்திரன் போன்றோர்கள் ஊடகங்களுக்கு அவ்வப்போது விடுதலை புலிகளை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளனர்.
சுமந்திரன் போன்றோர்களை இன்னும் ஏற்றுக்கொள்ள வேண்டுமா என வடக்கு தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும். சுமந்திரன் போன்றவர்களுக்கு இம்முறை தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்.
தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று கொண்டு வாக்களித்த மக்களுக்கு எதுவும் செய்யாமல் பாராளுமன்ற கதிரையை வெறுமனே அலங்கரித்து கொண்டு வருகின்ற சிங்கள தலைவர்களுடன் கைகோர்த்து ஏட்டிக்கு போட்டியாக தமிழ் மக்களை விலை பேசி வருகின்ற கூத்தாடிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இருந்து வருகின்றனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் சிறந்தவர்கள் இருக்கின்றார்கள். அவர்களை தமிழ் மக்கள் ஆதரிக்கும் அதேவேளை சுமந்திரன் போன்ற கறுப்பாடுகளை களைந்தெறிய வேண்டும் என்றார்.