எமிரேட்ஸை சேர்ந்த நபர் ஒருவர் இறந்த பின்னரும் நான்கு பேருக்கு உடல் உறுப்புகளை தானம் செய்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
எமிரேட்ஸை சேர்ந்த 41 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் விபத்தில் சிக்கியதால் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்.
சிகிச்சையும் பலனளிக்காமல் போன நிலையில் கடைசி நிமிடத்தில் தன்னுடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய விருப்பப்படுவதாக மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.
இதன்படி இவரது இதயம், இரண்டு சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் தானமாக பெறப்பட்டு சவுதி அரேபியாவில் சிகிச்சை பெற்று வந்த நால்வருக்கு பொருத்தப்பட்டது.
அந்நபர் இறந்ததும் 6 மணிநேர அறுவை சிகிச்சைக்கு பின்னர் உறுப்புகளை தானம் பெற்றதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
உடனடியாக தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இரு மருத்துவ குழுக்கள் சிறப்பு விமானம் மூலம் சவுதி அரேபியாவுக்கு கொண்டு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.