இலங்கையில் தற்போது நிலவும் தென்மேற்கு பருவமழையால் வெள்ளம், மண் சரிவு மற்றும் பலத்த காற்று ஆகிய அனர்த்த நிலைமை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில்,
“2020ஆம் ஆண்டிற்கான தென்மேற்கு பருவமழை மே மாதம் மூன்றாம் வாரத்தில் ஆரம்பிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.
கடந்த வருடங்களை போன்று இம்முறையும் தெற்மேற்கு பருவமழை பெய்தால் வெள்ளம், மண்சரிவினால் பாரிய ஆபத்துக்கள் ஏற்படக் கூடும்.
நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் தென்மேற்கு பருவமழை பெய்தால் அதனை முகாமைத்துவம் செய்வதற்கு கடுமையான சிரமம் ஏற்படும்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலைக்கு மத்தியில் மக்களை இணைந்து தெளிவுப்படுத்த முடியாத நிலை உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவை கட்டுபடுத்த ஊடங்கள் பாரிய உதவியை மேற்கொண்டமையினால் மக்களுக்கு பருவ மழை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும்,
எதிர்வரும் நாட்களில் ஏற்படும் அனர்த்தகளின் போது மக்கள் செயற்பட வேண்டிய முறை தொடர்பில் ஊடங்கள் மூலம் தெளிவுபடுத்துவதற்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


















