வடகொரியாவின் வடபகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரில் ரகசியமாக ஊரடங்கை பிறப்பித்துள்ளார் கிம் ஜாங் வுன்.
வெளியான குறித்த தகவலானது, வடகொரியாவில் கொரோனா தாக்கம் இருப்பதை உறுதி செய்துள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
வடபகுதியில் அமைந்துள்ள Rason நகரம் மொத்தமாக முடக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்திருக்கலாம் அல்லது,
கிம் ஜாங் வுன் Rason நகரில் இருந்து தமது இரண்டாவது பொது நிகழ்ச்சிகளை முன்னெடுக்க திட்டமிட்டிருக்கலாம் என அருகாமையில் அமைந்துள்ள நகர மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இந்த மாத துவக்கத்தில் இருந்தே, Rason நகருக்கு வெளியாட்களை செல்ல அனுமதிப்பதில்லை எனவும்,
Rason நகர மக்கள் வெளியே செல்லவும் அதிக கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக, அந்த பிராந்திய மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ரயில் பயணிகள் மட்டுமல்ல, சாலை மார்க்கம் பயணிப்பவர்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளே நுழைவதைத் தடுத்து வருகின்றனர்.
நகரத்தை திடீரென்று முடக்கியுள்ளது கொரோனா வைரஸ் தொடர்பானதாக இருக்கலாம் என்று குடியிருப்பாளர்கள் பலரும் சந்தேகிக்கின்றனர்,
இருப்பினும் நகருக்குள் நுழைவதற்கு தடை விதிக்க எந்த காரணத்தையும் அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் கூட Rason நகருக்கு இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதில்லை என கூறப்படுகிறது.
நகருக்குள் நுழைவதை அவர்கள் திடீரென தடுப்பதற்கான காரணம் எங்களுக்குத் தெரியாது என பெரும்பாலான மக்கள் தெரிவித்துள்ளனர்.
வட கொரியா கொரோனா பாதிப்பிலிருந்து தாங்கள் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கிறோம் என கூறி வருகிறது.
ஆனால் அது சீனாவுடனான தனது எல்லையை மூடிவிட்டு தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை சமீப நாட்களாக கடுமையாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.