மாத்தறை வெலிகம, மிதிகம துர்கி கிராமம் மீது இனந்தெரியாத குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இந்தத் தாக்குதல் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
10 பேர் அடங்கிய குழுவொன்று இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இந்த நிலையில் தாக்குதலை மேற்கொண்ட 3 பேர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களிடம் ஆயுதங்கள் மற்றும் கைத்துப்பாக்கிகள் இருந்தமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும் இந்த தாக்குதலில் காயமடைந்த மூவர் மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றநிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.