ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது மூன்று மாத சம்பளத்தை கோவிட் – 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்துக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
2 லட்சத்து 92 ஆயிரத்து 500 ரூபாயை அவர் இந்த நிதியத்துக்கு வழங்கியுள்ளார்.
அதற்கான காசோலை ஜனாதிபதி , இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவிடம் கையளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.