மே மாதத்திற்கான 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவுகளை வழங்க 2 ஆயிரத்து 572 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதனை அமைச்சரவை இணை பேச்சாளர்களில் ஒருவரான அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.
நாட்டில் கொரோனா தாக்கம் அதிகரித்தமையைத் தொடர்ந்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டின் பல பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டது.
இதனையடுத்து, குறைந்த வருமானம் பெறுவோருக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கும் பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்டன.
இந்நிலையில், நாட்டில் தொடர்ந்தும் அசாதாரண சூழ்நிலை நிலவுவதால், இந்த மாதமும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவுகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.