பிரித்தானியாவில் நிறைமாத கர்ப்பிணிப்பெண் ஒருவர் திடீரென சுருண்டு தரையில் விழ, அங்கேயே அவருக்கு குழந்தை பிறந்துள்ளது.
Kimberly Phillips (44) என்ற அந்த பெண் தரையில் விழவும், உடனடியாக குழந்தை பிறந்துள்ளது.
திடீரென மயக்கமுற்ரதைத் தொடர்ந்து Kimberlyக்கு இரத்தப் பரிசோதனை செய்யப்பட, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், குழந்தை Coolio Carl Justin Morganக்கு பல பிரச்சினைகள் இருப்பது தெரியவர, அவனை தனியாக குழந்தைகள் வார்டில் அனுமதித்துள்ளனர். மூன்று நாட்களுக்குப் பின் Morgan இறந்துபோனான்.
அவனது மூளைக்கு போதுமான இரத்தமும் ஆக்சிஜனும் செல்லாததும், அவனது தாய்க்கு கொரோனா தொற்று இருந்ததும் அவன் உயிரிழந்ததற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைக்கும் கொரோனா தொற்று இருக்கலாம் என்பதால் குழந்தையைத் தொட தந்தைக்கோ தாய்க்கோ அனுமதியளிக்கப்படவில்லை.
மகப்பேறு வார்டுக்கு அருகிலேயே ஏராளம் நோயாளிகளுடன் கொரோனா வார்டு இருப்பதால்தான் தன மனைவிக்கு கொரோனா வந்திருக்கும் என்று கூறும் அவரது கணவர் Carl Morgan, தனது மகனை தொடக்கூட முடியவில்லை என்று வருந்துகிறார்.