எவ் விதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் குடிசை வீட்டிலேயே கடைசி வரைக்கும் காணாமல் போன தன் பிள்ளையைத் தேடிக்கொண்டிருந்த தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கிளிநொச்சியில் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது.
கிளிநொச்சி மருதநகர் பகுதியில் எவ்வித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில், 23 வயதில் தமிழின அழிப்பு யுத்தத்தில் பிள்ளையைத் தொலைத்த தாய் உயிரிழந்துள்ளார்.
சின்னையா கண்ணம்மா என்ற 77 வயதான இந்த தாய் பிள்ளையும் காணாது பத்து ஆண்டுகளாக தனது மகன் சின்னையா பிரசாந்த் என்பவர் இன்று வருவார், நாளை வருவார் என போராட்டங்களிலும் விசாரணைகளிலும் தேடி அலைந்த நிலையில் தனது எஞ்சிய பத்து ஆண்டுகாலத்தையும் நிம்மதியற்றே கழித்து வந்துள்ளார்.
குறித்த தாயின் கணவர் இறந்து ஒரு வருடங்கள் ஆகாத நிலையில் கண்ணம்மாவின் மறைவும் குடும்பத்தை மாத்திரமல்ல பிரதேசத்தையும் மிகுந்த சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
நின்மதியாக உறங்குவதற்கு கூட நிரந்தர வீடு கூட அற்ற நிலையில் பிள்ளைகள் மற்றும் உறவினர்களின் சிறு உதவிகளுடன் தனக்கான வருமானத்திற்காக கோவில்களில் கச்சான் விற்று உயிரைப் பிடித்து மகனைத் தேடிய நிலையில் மகனைக் காணாதவளாகவே தன் உயிரை நீர்த்துள்ளார்.