நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக கேகாலையில் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளது.
கேகாலை, வட்டாரம கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட ஒருவரும், வல்தெனிய பகுதியில் வீடொன்றில் மண்மேடு சரிந்து விழ்ந்ததில் பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களுள் ஒருவர் 48 வயதுடைய ஆண் என்றும் மற்றவர் 65 வயதுடைய பெண் என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.