கட்டுநாயக்க, மகாகம பகுதியில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த துப்பாக்கிப்பிரயோகம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண் மீது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண் கட்டுநாயக்க, மகாகம பகுதியில் வசிக்கும் 38 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.