போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான இருவர் போதைப்பொருளுடன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செயப்பட்டுள்ளனர்.
கடந்த பன்னிரண்டாம் திகதி அன்று நிந்தவூர் கடற்கரை வீதியில் 58 கிராம் வைத்திருந்த குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட போது நபர் ஒருவர் தப்பி சென்றிருந்தார்.
குறித்த சந்தேக நபர் மாந்தோட்டை என்னும் இடத்தில் உள்ள வீடொன்றில் மறைந்திருப்பதாக இன்று சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலுக்கமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
இதன்போது கைதான சந்தேக நபரிடம் 590 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது.
பின்னர் சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது ஹெரோயின் போதைப்பொருளை கொள்வனவு செய்வதற்காக தானும் மற்றுமொரு சந்தேக நபரும் நிந்தவூர் பகுதியில் உள்ள அஹதியா பாலர் பாடசாலை ஒன்றில் கடந்த 6 ஆம் திகதி மின்விசிறிகள் மூன்று களவாடி விற்றதாக குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய களவாடப்பட்ட பொருட்களை வாங்கிய நபரை பொலிஸார் அடையாளம் கண்டதுடன் விற்கப்பட்ட பொருள்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டது.
மேலும் கைதான இரு சந்தேக நபர்களும் தடயப்பொருட்களும் நாளை சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.