துபாயில் பணிபுரியும் தமிழக இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில், அவர் உடலை இன்னும் தான் பார்க்கவில்லை என அழுது கொண்டே மனைவி பேசிய உருக்கமான வீடியோ வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம், புளியம்பட்டியை அடுத்துள்ள கொடியன்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் வேல்முருகன் (35). இவா், துபையில் தனியாா் நிறுவனத்தில் பணிசெய்து வந்தாா். கொரோனா தொற்றால் துபையிலும் பொது முடக்கம் அமுலில் உள்ளது.
இந்நிலையில் வேல்முருகன், கடந்த 10 ஆம் தேதி பணியில் ஈடுபட்டபோது, மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் வேல்முருகனுடன் வசித்த அவர் மனைவி மணிமேகலை கண்ணீருடன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
https://twitter.com/thaufikrahman19/status/1261597399920730114
அதில், கடந்த 10ஆம் திகதி எனது கணவர் எலக்ட்ரிக் வேலை செய்யும்பொழுது மின்னழுத்தத்தின் காரணமாக உயிரிழந்தார்
அவர் இறந்ததில் இருந்து சடலத்தை நான் இன்னும் பார்க்கவில்லை
யாராவது துபாய் நாட்டில் இருக்கிறார்களா இருந்தால் எனக்கு உதவி செய்யுமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்
அவரின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல உதவுங்கள் என கூறியுள்ளார்.
இதனிடையில், வேல்முருகனின் தந்தை கதிா்வேல், அவரது குடும்பத்தினா் மகனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி மூலமாக தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி, இந்திய பிரதமா் நரேந்திர மோடி ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனா்.
https://twitter.com/thaufikrahman19/status/1261597399920730114