யாழ்ப்பாணம் வடமராட்சி பிரதேசத்தில் ஊரடங்கு வேளையில் கிராமத்திற்குள் மோதல் வெடித்துள்ளது.
மாலுசந்தி, அத்தாய் கிராமத்திற்குள் தற்போது மோதல் இடம்பெற்று வருகிறது. ஊரடங்கு வேளையில், கிராமத்திற்குள் இரண்டு குழுக்களிற்குள் மோதல் இடம்பெற்று வருகிறது.
ஊரின் கணிசமான தொகையான இளைஞர்கள் இரண்டு குழுக்களாக மோதி வருகின்றனர். வாள், கத்தி, கொட்டன் கொண்டு மோதி வருகின்றனர்.
நெல்லியடி பொலிசாருக்கு தகவல் வழங்க பலமுறை முயன்றும், அவர்கள் தொலைபேசிக்கு பதிலளிக்கிறார்கள் இல்லையென அங்குள்ள ஒருவர் மேலும் தெரிவித்தார்.