பிரபல தெலுங்கு நடிகரான நிகில் சித்தார்த்- பல்லவி வர்மாவின் திருமணம் மிக எளிமையான முறையில் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொள்ள இனிதே நடந்து முடிந்தது.
தெலுங்கு நடிகர் நிகில் சித்தார்த், 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் டாக்டர் பல்லவி வர்மாவை கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்தார்.
கடந்தாண்டு மிக பிரம்மாண்டமாக இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் ஏப்ரல் 16ம் திகதி திருமண திகதி முடிவு செய்யப்பட்டு துபாயில் நடப்பதாக இருந்தது.
இதற்காக உற்றார், உறவினர்கள், குடும்ப நண்பர்கள் என அனைவருக்கும் துபாய் செல்ல தனி விமானமே புக் செய்திருந்தார்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக இந்தியாவிலும், துபாயிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் 16ந் தேதி திட்டமிட்டபடி திருமணம் நடக்கவில்லை.
கொரோனா பிரச்சினை முடிவுக்கு வராததால் 15ம் திகதி அதிகாலை ஐதராபாத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் திடீர் திருமணம் செய்து கொண்டார்.
முறையான அனுமதி பெற்று குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொள்ள இனிதே நடந்து முடிந்தது.
இவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.