மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் கடல் சீரற்ற நிலையில் காணப்படுவதால் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் கடல் நீர் உட்புகுந்து மக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்படுத்தியுள்ளது.
இதே போன்று அம்பாறை மாவட்டத்திலும் சில கரையோர பகுதிகளில் கடல் நீர் உள்புகுந்துள்ளது.
திருக்கோவில், பகுதியில், திருக்கோவில் ஸ்ரீ சித்திரவோலாயுத சுவாமி ஆலய வளாகத்தினுள் நேற்று பிற்பகல் கடலில் ஏற்பட்ட அதிக அமுக்க பெரும் அலைகளினால் கடல், நீர், ஆலயவளாகத்தினுள் சென்றுள்ளது.
மேலும் ஆலயத்தின் முன் நுளைவாயிலில், வரும் பாதைகடல் நீரினால், முற்றாக மூடப்பட்டுள்ளது.