ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியதும், சுவிட்சர்லாந்தைப்போலவே அதுவும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடு இல்லை என்பதால், இரு நாடுகளும் தங்கள் உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளன.
பிரித்தானியாவின் பிரெக்சிட் transition period, இந்த ஆண்டு இறுதிவாக்கில் முடிவுக்கு வருகிறது.
இந்நிலையில், ஏற்கனவே சுவிட்சர்லாந்துக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் நடைமுறையில் இருக்கும் ஒப்பந்தங்களை பிரெக்சிட்டுக்குப் பின்னும் தொடர சுவிட்சர்லாந்து விரும்புகிறது.
தற்போது இரு நாடுகளுக்கும் இடையில் நடைமுறையில் இருக்கும் முக்கிய ஒப்பந்தங்கள் வர்த்தகம், நிதி சேவைகள் மற்றும் பொலிஸ் ஒத்துழைப்பு தொடர்பானவையாகும்.
இந்த உறவுகள் மேலும் வலுப்படும் என்கிறார் Neuchatel நகர நாடாளுமன்ற உறுப்பினரான Damien Cottier.