ஈராக் மற்றும் சிரியாவிலிருந்து அமெரிக்கர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி எச்சரித்தார்.
மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்க படைகளை திரும்பப் பெறப்பட வேண்டும் என்ற ஈரானின் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார்.
2020 ஜனவரி 3ம் திகதி பாக்தாத்தில் அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதல் உயர்மட்ட ஈரானிய இராணுவத் தளபதி குவாசிட் சுலைமானி கொன்றதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியது.
சில நாட்களுக்குப் பிறகு ஈராக்கில் உள்ள அமெரிக்க தளம் மீது ஈரான் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது.
இந்நிழலையில், ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கர்களின் நடவடிக்கைகள் அவர்களை வெறுக்க வழிவகுத்தன என்று கமேனி கூறினார்.
அமெரிக்கர்கள் ஈராக் மற்றும் சிரியாவில் தங்க அனுமதிக்கப்படமாட்டார்கள், அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று கமேனி கூறினார்.