தனது மகள் வெளிநாட்டிலிருந்து திரும்பவில்லை என்றும், மகளை தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பாமல் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அழைத்துச் சென்றதாக வெளிவரும் செய்திகளை நிராகரிப்பதாகவும் தாம் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
இப்படியான ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பதை எவராவது உறுதிப்படுத்தினால் தாம் பதவியிலிருந்து இராஜினாமா செய்வேன் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.
அத்துடன் தனது மகள் பெலாரஸில் கல்வி கற்று வருவதாகவும், அவர் இன்னும் நாடு திரும்பவில்லை என்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.