அமெரிக்காவில் வீடில்லாமல் சாலையோரம் படுத்திருந்த ஒருவரை மற்றொருவர் தீவைத்து கொளுத்தும் காட்சிகள் கமெராவில் சிக்கியுள்ளன..
வாஷிங்டன் D.C பகுதியில், சாலையோரம் படுத்திருந்த Darryl Finney (62) என்பவர் மீது ஒருவர் தீவைத்து கொளுத்தியுள்ளார்.
அக்கம் பக்கத்தவர்கள் உடனடியாக தீயை அணைத்து Finneyயை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
ஆனால், இரண்டு நாட்களுக்குப்பின் சிகிச்சை பலனின்றி Finney பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பொலிசார் Finney மீது தீவைத்தவரை கண்டுபிடிப்பதற்காக அந்த CCTV கமெரா காட்சியை வெளியிட்டுள்ளனர்.
குற்றவாளியை கைது செய்ய உதவும் வகையில் துப்புக் கொடுப்போருக்கு 25,000 டொலர்கள் பரிசு வழங்கப்படும் என பொலிசார் அறிவித்துள்ளனர்.