கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவி்த்துள்ளது.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 991ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 559 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த 15 கடற்படையினர் நேற்றைய தினம் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுறுதியிலிருந்து பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 204 ஆக உயர்ந்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.