தமிழகத்தில் அத்தையை கொலை செய்த இளைஞன், முதலில் தனக்கு அத்தையுடன் தான் உறவு இருந்ததாகவும், அதன் பின் சித்தியுடன் தொடர்பு ஏற்பட்டதால், அது பிடிக்காமல் என்னை கண்டிக்கவும், நான் அவரை கொலை செய்துவிட்டேன் என்று அந்த இளைஞன் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னையை அடுத்த புழல் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவருக்கு குணசுந்தரி(37) என்ற மனைவி இருந்தார். குணசுந்தரியின் தம்பியான லோகு என்பவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, இறந்துவிட்டார்.
குணசுந்தரியின் அண்ணன் மகன் கணேசன்(26), கொளத்தூரில் வசித்து வருகிறார். மனைவி இவருடன் சண்டை போட்டுக் கொண்டு அம்மா வீட்டுக்கு போய்விட்டார்.
மனைவியை பிரிந்து வாழ்ந்த நிலையில், தான், கணேசனுக்கும், லோகுவின் மனைவிக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.
அதாவது லோகுவின் மனைவி கணேசனுக்கு சித்தி முறை, 5 மாதமாக இருவரும் நெருக்கமாக இருந்து வந்துள்ளனர்.
தன்னுடைய தம்பி மனைவியுடன், அண்ணன் மகன் இப்படி முறைதவறி நடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த குணசுந்தரி, இந்த உறவை விட்டுவிடும் படி கணேசனை கண்டித்துள்ளார்.
ஆனால் அவர் கேட்காத காரணத்தினால், ஆத்திரம் அடைந்த குணசுந்தரி, கணேசன் வீட்டுக்கு சென்று உறவை கைவிடும்படி மீண்டும் சொல்ல, இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதனால், பொறுமை இழந்த கணேசன், ஆத்திரத்தில் அங்கிருந்த காய்கறி நறுக்கும் கத்தியால் சரமாரியாக குத்த, குணசுந்தரி பரிதாபமாக இறந்தார்.
இதனால் செய்வதறியாமல் கணேசன் அப்பகுதியை விட்டு தப்பி ஓடிவிட்டார். இந்த தகவல் பொலிசாருக்கு தெரியவர, கணேசனை பொலிசார் தேடி வந்தனர்.
அப்போது, வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு கொண்டமல்லி கிராமத்தில் அவர் பதுங்கியிருப்பது தெரியவந்ததால், பொலிசார் அவரை கைது செய்தனர்.
இதையடுத்து, அவரை சென்னைக்கு அழைத்து வந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட போது, கணேசன் அளித்த வாக்குமூலம் பொலிசாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதில், முதலில் எனக்கும் என் அத்தை குணசுந்தரிக்கும் தான் தவறான உறவு இருந்தது. அத்தைக்கு கல்யாணம் ஆனதும், நான் ஒதுங்கி விட்டேன், அதன் பின்பு சித்தியுடன் தொடர்பு வைத்து கொண்டேன்.
நாங்கள் இருவரும் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தோம், இது என் அத்தைக்கு பிடிக்காத காரணத்தினால், தொடர்ந்து தொந்தரவு கொடுத்த படி இருந்தார்.
நாங்க நெருங்கி பழகியபோது அத்தை எனக்கு நிறைய பண உதவி செய்திருக்கிறார். இப்போது அதை எல்லாம் கேட்டு தொந்தரவு செய்ய ஆரம்பித்தார்.
இது தொடர்பாகத் தான் சம்பவ தினத்தன்று அவர் வீட்டுக்கு வந்த பணம் கேட்டு தகராறு செய்ததுடன், சித்தியுடன் உறவு வைத்து கொள்ள கூடாது என்று பிரச்சனை செய்தார்.
இதனால் ஆத்திரமடைந்த நான் காய்கறி வெட்டும் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்றுவிட்டேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து, அவரை சிறையில் அடைத்த பொலிசார், இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.