கனமழைக் காரணமாக இரத்தினபுரி வெவெல்வத்தை பட்டேவெல பிரதேசத்தில் வீடொன்றின் பகுதி இடிந்து விழுந்ததில் 9 வயதான சிறுவன் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று மதியம் நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பட்டேவெல பிரதேசத்தை சேர்ந்த ரஷ்மிக சமிந்த என்ற சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
வீடு இடிந்து விழும் போது சிறுவனும் அவரது தாயாரும் வீட்டுக்குள் இருந்துள்ளனர்.
வீடு இடிந்து விழும் போது தாய் அந்த இடத்தில் இருந்து விலகிச் சென்றுள்ளதுடன் சிறுவன் இடிப்பாடுகளுக்குள் சிக்கியுள்ளார்.
சம்பவம் குறித்து வெவெல்வத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.