ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் நாட்டுக்கு ஆபத்து என சமூக ஊடகங்களில் வெளியான செய்தி ஆதாரமற்றது என்று இராணுவம் தெரிவித்துள்ளது.
எனவே அரச முத்திரையுடன் வெளியான இந்த செய்தியினால் பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அரச நிறுவனங்களுக்கு இடையிலான உள்ளக தகவல் என்ற அடிப்படையில் இந்த செய்தியை சமூக ஊடகங்கள் பிரசுரித்திருந்தன.
இந்த நிலையில் குறித்த செய்தியில் உண்மையில்லை என்று குறிப்பிட்டுள்ள இராணுவப் பேச்சாளர் சந்தன விக்கிரமசிங்க, அவ்வாறு அச்சுறுத்தல் இருக்குமானால் அதனை எதிர்கொள்ள படையினர் தயாராகவே உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் பின்னர் பல தடவைகளாக இவ்வாறான போலி செய்திகள் பரப்பப்பட்டதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.