வெளிநாடுகளில் தொழில் செய்து விடுமுறையில் நாடு திரும்பியிருக்கும் இலங்கையர்கள் அவர்களது தொழில்வாய்ப்புக்களை இழக்கும் ஆபத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை அடுத்து உலகில் பல நாடுகள் பயணக்கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் நாடு திரும்பியோர் மீள அவர்களது பணியிடங்களுக்குச் செல்வதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இதனால் வெளிநாடுகளில் பணியாற்றியோர் பணியிடப்பிரதானியிடம் அறிவித்து கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதும் தொழிலில் மீண்டும் இணைய வாய்ப்பை ஏற்படுத்தித்தருமாறு கோரிக்கையை முன்வைக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
பணியிடப் பிரதானிகளை தொடர்புகொள்ள முடியாதவர்கள் அந் நாடுகளில் உள்ள இலங்கைக்கான உயர்ஸ்தாரிகராலயத்தின் தொழிலாளர் பிரிவுடன் தொடர்பு கொண்டு தகவல்களை பறிமாறிக்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் www.slbfe.lk என்ற இணையத்தளத்தின் மூலமும் தேவையான ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.