தனுஷ் மற்றும் சாயா சிங் நடிப்பில் 2003-ம் ஆண்டு வெளிவந்த படம் தான் திருடா திருடி. அந்த படத்தில் வரும் மன்மத ராசா பாடல் மிகப்பெரிய ஹிட். காரணம் அந்த பாடலுக்கு ஆடிய தனுஷ் மற்றும் சாயா சிங் ஆகியோரின் நடனம் தான்.
இந்த பாடல் வந்து சுமார் 17 வருடங்கள் ஆகிவிட்டது. அது போல அதன்பிறகு வந்த பாடல்கள் நடனத்திற்காக அதிகம் பேசப்பட்டதில்லை. அந்த அளவுக்கு 2018ல் வந்த ரௌடி பேபி பாடல் தான் அதிகம் பாராட்டுகளை குவித்தது.
இந்த நிலையில், மன்மத ராசா பாடலுக்கு தற்போது நடிகை சாயா மீண்டும் சிங் நடனம் ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் பிறந்தநாள் ஸ்பெஷலாக தான் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
ஒரு வருடத்திற்க்கு முன்பு சாயா சிங் சிவசங்கர் மாஸ்டரை சந்தித்த போது அவருடன் ஆடி இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார். மன்மத ராசா பாடலுக்கு ஆடிய நினைவுகளை தற்போது பல வருடங்கள் கழித்து மீண்டும் வாழ்வது போல இது இருந்தது என சாயா சிங் தெரிவித்துள்ளார். இந்த காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.