டெங்கு தொற்றை நிறுத்துவதற்காக ஏடெஸ் நுளம்பைக் கட்டுப்படுத்தும் யுத்தம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அனில் ஜாசிங்க இதனை அறிவித்துள்ளார்.
இந்த தருணத்தில் டெங்குவை கட்டுப்படுத்தாவிட்டால் இலங்கை மக்கள் இரண்டு பிரச்சனைகளை ஒரே நேரத்தில் எதிர்கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவர் என்று அவர் எச்சரித்துள்ளார்.
எனவே கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு மத்தியில் டெங்குவையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
கொரோனாவிற்கு காய்ச்சல் ஒரு குணங்குறியை போன்று டெங்குவுக்கும் காய்ச்சல் ஒரு குணங்குறியாக இருக்கும்.
எனவே பொதுமக்கள் குறிப்பாக நீர் நிலைகள் உள்ள இடங்களில் இருந்து டெங்கு நுளம்பு பரவலை தடுக்கவேண்டும் என்று அனில் ஜாசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.