கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கல்லூரிக்கு செல்லும் வழியில் பழக்கடை நடத்தி வந்த சதீஷ் என்ற நபரை காதலித்து வந்துள்ளார்.
இதையடுத்து, ஊரடங்கு உத்தரவால் வீட்டிலேயே இருந்த சிறுமி, காதலனுடன் போனில் பேசி வந்துள்ளார். இந்த விடயம் பெற்றோருக்கு தெரிய வர உடனே அவசரமாக உறவுக்கார பையனுடன் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
திருமணம் முடிந்த கையோடு, முதலிரவு அறைக்குள் புதுமாப்பிள்ளை சென்றுள்ளார். அப்போது மனைவி தனது காதலனுடன் செல்போனில் பேசி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார் கணவர்.
அதன்பின், தான் மனைவியை பற்றிய அனைத்து உண்மைகளும் தெரியவந்துள்ளது. இதனால், யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார் புதுமாப்பிள்ளை. பின் தனது காதலனுக்கு போன் செய்து தன்னை பார்க்க வருமாறு கூறியுள்ளார் அந்த சிறுமி. காதலியை கூப்பிட்டவுடன் சதீஷும் வீட்டிற்கு வந்துள்ளார்.
இதனை பார்த்த அந்த சிறுமியின் பெற்றோர் சதீஷை போலீசாரிடம் பிடித்து கொடுத்துள்ளனர். இதனால், தனது காதலனை காப்பாற்ற நினைத்த சிறுமி காவல் நிலையத்திற்கு சென்று தன்னை தனது பெற்றோர்கள் கட்டாயம் திருமணம் செய்து வைத்ததாகவும், தனக்கு 17 வயது தான் ஆகிறது என்றும் கூறியுள்ளார். அதன்பின் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




















